வெளியே கொணரும் ரமலான்;
மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை
முகத்தில் காண்பிக்கும் ரமலான்!
முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலான்;
ஐந்து வேலை தொழுகையில் – மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்!
இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்;
நினைப்பதை நடத்தும் உறுதியை – மனதில் நிறைக்கும் திடத்தை
ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ரமலான்!
சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து – அதை
சுற்றத்திற்கும் ‘வாழ்ந்து கற்பிக்கும் ரமலான்;
உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலான்!
மறைபொருள் இறையென விடாது உயிர்பொருள் அவனென எண்ணியதில்
‘அல்லா’ எல்லாமுமாய் நின்று அருள்பாலிக்கும் ரமலான்;
ஏற்றத் தாழ்வினை கடந்து – இறையன்பில் கூடிநின்றோருக்கு மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலான்!
இல்லார் இல்லாததை மறந்துஇருப்போர் இயன்றதை வழங்கி உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளைகொண்டாடி மகிழும் ‘குதூகல ரமலான்;
கோடான கோடி பேரின் மகிழ்வில் பிறக்கும்
இறைதூதர் பணித்திட்ட ‘கண்ணியப் பெருநாள்; திருநாள்; ரமலான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக