புதன், 23 ஜூலை, 2014

மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து

முத்தான மூன்றிலே முன்னேறும் என்மகளே
நூறாண்டு வாழ்க நீ பெரியோரின் ஆசிபெற்று

மூன்றாம்பிறை தென்றலென வாழ்க நீ
கற்றோரின் ஆசிபெற்று வாழ்க நீ பல்லாண்டு


அன்பு கொண்ட ஆன்றோரின் அறிவுரை கேட்டு
இனிமையுடன் தொடங்கட்டும் உன் முன்னேற்றம்

வளம் கொண்டே வாழ்க நீ வசந்தமே
நலம் பெற்று நல்லோர் புகழ வாழ்க நீ

தமிழ் எனும் சுகம் பெற்று வாழ்க நீ
வெற்றி எனும் பரிசுக்கு உகந்தவளே


பாசம் எனும் மழையிலே நனைத்திடும் என்மகளே
நேசம் கொண்டு உனை வாழ்த்திடுவார் பெரியோர்கள்

சான்றோரென நீ வாழ சகலரும் உனைவாழ்த்த‌
பெரும்பாக்கியம் பெற்றோமென பெற்றோரின் ஆசியுமுண்டுனக்கு

நட்பு எனும் நம்பிக்கைக்கு உகந்தவளே
நன்மை எனும் பெயருக்கு தகுந்தவளே நீ வாழ்க‌

பெண்ணுக்கு புகழ் சேர்க்கும் என்மகளே
கண்ணின் கருமணியே நீ வாழ்க பல்லாண்டு

வள்ளலவர் ஆசி பெற்று வள்ளலெனவாகிடுவாய்
உன்னாசிரியர்கள் உனைப் புகழ வளர்ந்திடுவாய்

பெருமைக்கு பெருமை சேர்க்கும் பொக்கிஷமே
அருமையான அற்புத எம்குல மகளே வாழ்க நீ

அழகிலெ அன்னமென ஆடி வரும் என்மகளே
மனதிலே பத்தரைமாற்று தங்கமே நீ வாழ்க‌

பார்புகழ நீ வளர்ந்து பெருமைகளை சேர்த்திடவே
மாசற்ற மாண்புகள் பெற்றே நீ வாழ்க பல்லாண்டு

என்ம‌க‌ளே இந்நாள் போல் எந்நாளும்
சிற‌ந்து நீ விள‌ங்கிட‌ பிற‌ந்த‌நாள் நல்வாழ்த்துக்க‌ள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக