'தேர்தலின் போது, விரும்பும் வேட்பாளருக்கு, மொபைல்போன் மூலம்,
வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இந்த மின்னணு
தேர்தல் முறையால், ஒளிவுமறைவற்ற தன்மை உருவாகும்' என, முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
புத்தகத்தில் தகவல்:
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 'மாற்றத்திற்கான ஒரு அறிக்கை' என்ற தலைப்பில், புதிய புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ளதாவது:தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான தன்னாட்சி அமைப்பாக, தற்போது செயல்படுகிறது. அதுபோல், மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ., மற்றும் ஊழல் வழக்குகளை கையாளும் சிறப்பு நீதிமன்றங்கள் போன்றவையும் சுதந்திரமாக செயல்படும் வகையில், புதிய சட்ட மசோதா ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்.அதேபோல், நாட்டில், மின்னணு தேர்தல் முறையை அறிமுகம் செய்ய வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தினால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், குறிப்பிட்ட தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்ததும், அவரின் அடையாளத்தை, தேசிய குடிமகன் அடையாள அட்டை உட்பட, சில வகை ஆவணங்கள் மூலம், தேர்தல் அதிகாரி உடனே உறுதி செய்யலாம்.அவரது குற்றப்பின்னணி, சொத்து விவரம் உட்பட மற்ற விவரங்களையும் ஆய்வு செய்து அவர் வேட்புமனு முறையானதா என்று முடிவு செய்ய முடியும்.கல்வித் தகுதி குறித்த விவரங்களை பல்கலை ஆவணங்களில் இருந்து அறிய வசதிகள் அதில் இருக்க வேண்டும்.
மின்னணு நிர்வாக மென்பொருள் மூலம், இந்த விவரங்களை எல்லாம், சில நிமிடங்களில் தேர்தல் அதிகாரியின், கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் வசதி இருக்க வேண்டும். அப்படி இருந்தால், வேட்பாளரின் தகுதி குறித்து, அவர் உடனே முடிவு செய்து விடுவார்.பின், தேர்தல் நடவடிக்கைகளின் போது, ஒவ்வொரு வேட்பாளரும், தங்களுக்கான தேசிய அடையாள எண்ணை பயன்படுத்தி, மொபைல்போன் மூலம் ஓட்டளிக்கும் முறையை அறிமுகம் செய்யலாம். அவர்கள் ஓட்டளிக்கும் போது, அதற்கு என, பிரத்யேக எண் கொண்ட மொபைல் போன் தேர்தல் அதிகாரியிடம் இருக்க வேண்டும். ஓட்டுச் சாவடிக்கு செல்ல விரும்பாதவர்களுக்கு, இப்படிப்பட்ட ஓட்டளிக்கும் முறையை அறிமுகப்படுத்தலாம். மக்கள் ஆர்வமாக ஓட்டளிக்க இது உதவும். தேர்தலில், இது போன்ற முறையை அமல்படுத்த முடியுமா? எப்போது இது நடைமுறைக்கு வரும்? இந்த நவீன முறையை, அரசியல் கட்சிகள் நம்புமா? இந்த முறை அமலாக, அதிகாரிகள் அனுமதிப்பார்களா? என்ற கேள்விகள் எல்லாம் எழலாம். தொழில்நுட்பம் மேம்பட்டு வரும் சூழ்நிலையில், இவை எல்லாம் சாத்தியமே. இதுபோன்ற ஒளிவுமறைவற்ற தேர்தல் முறையை அமல்படுத்துவதில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தைரியமாக செயல்பட வேண்டும். அப்படி அமல்படுத்தினால், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெறுவதோடு, தற்போதைய தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளும் களையப்படும். இவ்வாறு, கலாம் தெரிவித்து உள்ளார்.
09.07.2014 தினமலர் செய்தி

வேட்பாளர் தகுதி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக