ரவுடியாக வரும் பாபி சிம்ஹா, பட்டையைக்
கிளப்பியிருக்கிறார். பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டுவதாகட்டும்,
அர்த்தமற்ற ஒலிகளில் உணர்வை வெளிப்படுத்தும் ஜிப்ரீஷ் மொழியைக்
கற்றுக்கொள்வதாகட்டும், தன்னைக் கொல்ல வந்தவனையும் டைட்டானிக் நாயகி
முகமூடியை அணிந்து சுட்டுக் கொல்வதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக
முத்திரை பதிக்கிறார்.
படம் முழுக்க, அங்கங்கே நகைச்சுவை இயல்பாக அமைந்திருக்கிறது.
சித்தார்த்தின் மதுரை நண்பனாக வரும் கருணாகரன், வளையல் கடை நடத்திக்கொண்டே
நகைச்சுவையில் கலகலப்பு ஊட்டுகிறார். தான் எடுக்கும் படத்தின் இரண்டாவது
கதாநாயகன் என ஆசை காட்டி, சித்தார்த் அவரைக் கவிழ்ப்பது ருசிகரம். என்ன
கத்தியாலேயே மிரட்டிக்கிட்டிருக்கீங்க, துப்பாக்கியாலே மிரட்டுங்க என
ரவுடிக்கு இவர் யோசனை கொடுப்பதும் அதன் விளைவும் சிரிப்பூட்டக் கூடியது.
இவர் மட்டுமல்லாது, வேறு பலரிடமும் நகைச்சுவை வெளிப்படுகிறது.
செக்ஸ் படங்களைப் பார்க்கும் ரவுடியின் கையாளுக்கு ஜப்பான், கொரியா என
ஒவ்வொரு நாட்டுப் பட குறுந்தகடுகளாகக் கொடுத்து, உலக சினிமாவைக்
காட்டுவதும் வேட்டையாடு விளையாடு படத்தின் பெயரில் மேட்டர் படத்தின்
சிடியைக் கொடுத்துச் சிக்குவதும் உதாரணங்கள். சாவு வீட்டில் பிணத்தின்
அருகே அழும் பெண்மணியின் நடிப்பு அருமை.
விஜய் சேதுபதி, கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேசும் ஒரு வசனம் 'நச்'. வேறு 'ஏரியா'ப் பெண்ணை நண்பன் 'சைட்' அடிக்க, அவருக்குத் துணையாக விஜய் சேதுபதி வருகிறார். அந்தப் பெண்ணின் அண்ணன் வந்து, "உங்க ஏரியாவுல பொண்ணே இல்லையா?" என்று கேட்க, "உங்க ஏரியாவுல தான் ஆம்பளைங்க இல்லைன்னாங்க, அதான் வந்தோம்" என முரட்டு அடி அடிக்கிறார்.
விஜய் சேதுபதி, கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேசும் ஒரு வசனம் 'நச்'. வேறு 'ஏரியா'ப் பெண்ணை நண்பன் 'சைட்' அடிக்க, அவருக்குத் துணையாக விஜய் சேதுபதி வருகிறார். அந்தப் பெண்ணின் அண்ணன் வந்து, "உங்க ஏரியாவுல பொண்ணே இல்லையா?" என்று கேட்க, "உங்க ஏரியாவுல தான் ஆம்பளைங்க இல்லைன்னாங்க, அதான் வந்தோம்" என முரட்டு அடி அடிக்கிறார்.
'என்னை யூஸ் பண்ணிக்கிட்டியா?' எனக் கேட்கும் லட்சுமி மேனனுக்கு அதிகக்
காட்சிகள் இல்லாவிட்டாலும் தனக்கு அளித்த பாத்திரத்தில்
பொருந்தியிருக்கிறார். சேலைத் திருடியாக அவர் வருவதும் சேலையை மட்டுமே
திருடுவது என்பது கம்பெனி பாலிசி என்பதும் வேடிக்கையான காட்சிகள். அவர்
சித்தார்த்துக்கு லுக் விடுவது வரை சரிதான். ஆனால், அதிகம் பழகியிராத
ஒருவருக்குப் பெண்கள் லவ் லெட்டர் கொடுப்பார்களா, என்ன? அதுவும்
மதுரையில்.
'கண்ணம்மா கண்ணம்மா' பாட்டும் கிணற்றுக்குள் வைத்த குத்துப் பாட்டும்
அருமை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, படத்திற்கு நல்ல துணை. ஒளிப்பதிவு
இயல்பாக இருக்கிறது. படம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இதை
இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம். குருவம்மா கதை சொல்லும் பெட்டிக் கடைப்
பெரியவரின் காட்சிகளை நீக்கினால், படத்திற்கு அதனால் பெரிய இழப்பு ஒன்றும்
நேர்ந்துவிடாது. எனினும் மூன்று மணிநேரப் படமாக இருப்பதால் பெரிய சிக்கல்
எதுவும் இல்லை. படத்துடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது.
தன்னுடன் இருக்கும் வேவு பார்ப்பவனை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும்
அளவுக்குப் புத்திசாலித்தனம் உள்ள சிம்ஹா, தனது கதை முழுவதையும் யார் யாரை
எங்கே எப்படிக் கொன்றான் என்பதை வீடியோவில் பதிவு செய்வதற்கு எப்படிச்
சம்மதித்தான் என்பது மட்டுமே சிறு நெருடல். மற்றபடி, படம் செம.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக