செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – திரை விமர்சனம்
நாயகன் சந்தோஷ் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.
இவருடன் கதை விவாததத்திற்கு உதவியாக விஜய் ராம், தினேஷ், லல்லு மற்றும்
தம்பி ராமையா இருக்கிறார்கள். நாயகன் சந்தோஷ் நாயகி அகிலா கிஷோரை காதலித்து
வருகிறார்.
இவர்கள் காதலிக்கும்போது சந்தோஷ் இயக்குனர் ஆன பிறகுதான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். ஆனால் அகிலா கட்டாயத்தின் பெயரில் அகிலாவின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.
அகிலா தனியார் கம்பெனியில் வேலை செய்வதால் சந்தோஷை வீட்டிலேயே இருந்துக்கொண்டே இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய் என்று கூறுகிறார். சந்தோஷும் தன் நண்பர்களுடன் வீட்டில் கதை விவாதத்தில் ஈடுபடுகிறார். இது அகிலாவிற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.
சந்தோஷ் ஒரு கதையை தயார் செய்து தயாரிப்பாளரின் சம்மதத்திற்குகாக காத்துக்கொண்டிருக்கும் வேலையில், சந்தோஷ் அகிலா இருவரின் சண்டை மேலும் வலுவடைந்து சினிமா உலகில் இயக்குனராவது கடினம் என்பதை அறிந்து அகிலா, சந்தோஷிடம் நீங்கள் இயக்குனர் ஆகும் வரை நாம் பிரிந்து வாழலாம் என்று கூறிவிட்டு பிரிந்து செல்கிறார்.
பிறகு சந்தோஷ் தயாரிப்பாளரிடம் சென்று கதையை கூறி இயக்குனரானாரா? அகிலாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
இயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதானாமாக யோசித்து ஒரு கதையை உருவாக்க முயற்சி செய்து, அதில் கதையே இருக்கக் கூடாது என்று முடிவு செய்து படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை முடியும்போது இப்படத்தை பற்றி திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள் என்ன பேசிக் கொள்வார்கள், சமூக வளைய தளங்களில் கொடுக்கும் கமண்டுகளை மிக சாதுர்யமாக குழப்பி கமண்டு கொடுக்க முடியாதளவிற்கு தடுத்திருக்கிறார். இறுதிவரை இப்படத்தைப் பார்த்தப் பிறகுதான் கருத்தை சொல்ல முடியும் என்ற அளவிற்கு படத்தை இயக்கியிருக்கிறார்.
இன்றைய சினிமாவுலகில் ரசிகர்கள் எப்படி படம் பார்க்கிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கதையே இல்லாத ஒரு திரைப்படம் என்று சொல்லி தனக்கே உள்ள வித்தியாசமான பாணியில் ரசிகர்கள் பார்க்கும்படி செய்திருப்பது இவருக்கே உரிய சிறப்பு.
தம்பிராமையா மட்டுமே பழகிய முகமாக வைத்து மற்ற அனைவரையும் புது முகங்களாக வைத்து அவர்களை பழகிய முகமாக தெரியும்படி செய்திருப்பது பார்த்திபனின் மேலும் ஒரு சிறப்பு.
நாயகன் சந்தோஷ், நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் கதாப்பாத்திரத்தை உணர்ந்து புதுப்படம் என்று சொல்லமுடியாதளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் ராம், தினேஷ், லல்லு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தம்பிராமையா ரசிகர்களுக்கு சோர்வடையவிடாமல் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார். இளைஞர்களுடன் சேர்ந்துக் கொண்டு படம் முழுக்க இளைஞராகவே வலம் வருகிறார்.
இசையமைப்பாளர்கள் ஷரத், விஜய் ஆண்டனி, தமன், அல்ஃபோன்ஸ் ஜோசப் ஆகியோர் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்கள். ராஜ ரத்னம் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பார்த்திபன் போல்.

அஞ்சான் – திரை விமர்சனம்
கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன்
அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன்
அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின்
கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு
அறிகிறார் கிருஷ்ணா.
அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார்.
கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷனர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.
இதற்கிடையில் மும்பையில் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அனுப்புகிறார்.
இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.
கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.
அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றேன் என கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க….
படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகளபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜமால் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார். சூரி கொஞ்ச நேரமே வந்தாலும் நகைச்சுவையில் ரசிகர்களை கலகலப்பூட்டுகிறார். வில்லனாக வரும் இம்ரான் பாய் கோட் சூட்டில் ஜென்டில்மேன் போன்று காட்சியளித்தாலும் வில்லத்தனத்தில் கொடுரம் காட்டியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய ‘காதல் ஆசை…’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்…’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகளில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.
மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து கதையில் லிங்குசாமி வைத்திருக்கும் திருப்புமுனை அவரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அஞ்சான்’ அதகளபடுத்தியிருக்கிறான்.

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்
ரவுடியாக வரும் பாபி சிம்ஹா, பட்டையைக்
கிளப்பியிருக்கிறார். பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டுவதாகட்டும்,
அர்த்தமற்ற ஒலிகளில் உணர்வை வெளிப்படுத்தும் ஜிப்ரீஷ் மொழியைக்
கற்றுக்கொள்வதாகட்டும், தன்னைக் கொல்ல வந்தவனையும் டைட்டானிக் நாயகி
முகமூடியை அணிந்து சுட்டுக் கொல்வதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக
முத்திரை பதிக்கிறார்.
படம் முழுக்க, அங்கங்கே நகைச்சுவை இயல்பாக அமைந்திருக்கிறது.
சித்தார்த்தின் மதுரை நண்பனாக வரும் கருணாகரன், வளையல் கடை நடத்திக்கொண்டே
நகைச்சுவையில் கலகலப்பு ஊட்டுகிறார். தான் எடுக்கும் படத்தின் இரண்டாவது
கதாநாயகன் என ஆசை காட்டி, சித்தார்த் அவரைக் கவிழ்ப்பது ருசிகரம். என்ன
கத்தியாலேயே மிரட்டிக்கிட்டிருக்கீங்க, துப்பாக்கியாலே மிரட்டுங்க என
ரவுடிக்கு இவர் யோசனை கொடுப்பதும் அதன் விளைவும் சிரிப்பூட்டக் கூடியது.
இவர் மட்டுமல்லாது, வேறு பலரிடமும் நகைச்சுவை வெளிப்படுகிறது.
செக்ஸ் படங்களைப் பார்க்கும் ரவுடியின் கையாளுக்கு ஜப்பான், கொரியா என
ஒவ்வொரு நாட்டுப் பட குறுந்தகடுகளாகக் கொடுத்து, உலக சினிமாவைக்
காட்டுவதும் வேட்டையாடு விளையாடு படத்தின் பெயரில் மேட்டர் படத்தின்
சிடியைக் கொடுத்துச் சிக்குவதும் உதாரணங்கள். சாவு வீட்டில் பிணத்தின்
அருகே அழும் பெண்மணியின் நடிப்பு அருமை.
விஜய் சேதுபதி, கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேசும் ஒரு வசனம் 'நச்'. வேறு 'ஏரியா'ப் பெண்ணை நண்பன் 'சைட்' அடிக்க, அவருக்குத் துணையாக விஜய் சேதுபதி வருகிறார். அந்தப் பெண்ணின் அண்ணன் வந்து, "உங்க ஏரியாவுல பொண்ணே இல்லையா?" என்று கேட்க, "உங்க ஏரியாவுல தான் ஆம்பளைங்க இல்லைன்னாங்க, அதான் வந்தோம்" என முரட்டு அடி அடிக்கிறார்.

'என்னை யூஸ் பண்ணிக்கிட்டியா?' எனக் கேட்கும் லட்சுமி மேனனுக்கு அதிகக்
காட்சிகள் இல்லாவிட்டாலும் தனக்கு அளித்த பாத்திரத்தில்
பொருந்தியிருக்கிறார். சேலைத் திருடியாக அவர் வருவதும் சேலையை மட்டுமே
திருடுவது என்பது கம்பெனி பாலிசி என்பதும் வேடிக்கையான காட்சிகள். அவர்
சித்தார்த்துக்கு லுக் விடுவது வரை சரிதான். ஆனால், அதிகம் பழகியிராத
ஒருவருக்குப் பெண்கள் லவ் லெட்டர் கொடுப்பார்களா, என்ன? அதுவும்
மதுரையில்.
'கண்ணம்மா கண்ணம்மா' பாட்டும் கிணற்றுக்குள் வைத்த குத்துப் பாட்டும்
அருமை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, படத்திற்கு நல்ல துணை. ஒளிப்பதிவு
இயல்பாக இருக்கிறது. படம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இதை
இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம். குருவம்மா கதை சொல்லும் பெட்டிக் கடைப்
பெரியவரின் காட்சிகளை நீக்கினால், படத்திற்கு அதனால் பெரிய இழப்பு ஒன்றும்
நேர்ந்துவிடாது. எனினும் மூன்று மணிநேரப் படமாக இருப்பதால் பெரிய சிக்கல்
எதுவும் இல்லை. படத்துடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது.
தன்னுடன் இருக்கும் வேவு பார்ப்பவனை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும்
அளவுக்குப் புத்திசாலித்தனம் உள்ள சிம்ஹா, தனது கதை முழுவதையும் யார் யாரை
எங்கே எப்படிக் கொன்றான் என்பதை வீடியோவில் பதிவு செய்வதற்கு எப்படிச்
சம்மதித்தான் என்பது மட்டுமே சிறு நெருடல். மற்றபடி, படம் செம.
வியாழன், 31 ஜூலை, 2014
திருமணம் எனும் நிக்காஹ் - திரை விமர்சனம்
‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் தயாராகி பல மாதங்களாகியும் வெளிவராமல் இருந்தது கண்டு கோடம்பாக்கத்தில் பல்வேறு வதந்திகள்.
ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரனின்
தயாரிப்பில் ஜெய், நஸ்ரியா நஸீம் நடிப்பில் அனீஸ்
இயக்கியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் பணப்
பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும், இதனால் படம் வெளிவர
தடையிருப்பதாகவும், இன்னொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் இந்தப் படத்தை
எதிர்ப்பதாகவும். அதனால் ஏற்பட்ட சிக்கலால்தான் வெளியிட முடியவில்லை
என்றும் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கிசுகிசுக்கள் பறந்து வந்தன.
முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்காக
படத்தினை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர்
ரவிச்சந்திரன். படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சிலர் ஓகே என்றாலும்.. வேறு
சிலர் சொல்லணுமே என்பதற்காக சில காட்சிகளுக்கு ஆட்சேபணை
தெரிவித்தார்களாம்.. ஆனாலும் அவர்களிடம் ரவிச்சந்திரன் நைச்சியமாகப் பேசி
சமாளித்து அனுப்பிவிட்டிருக்கிறார்.
இப்போது இந்தப் படம் ரம்ஜான் பண்டிகையன்று
வெளிவர வாய்ப்பிருப்பதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“திருமணம் எனும் நிக்காஹ்’ எல்லோருக்கும்
பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ , காயபடுதவோ
எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை
வெளிபடுத்தும் படம்தான் ‘திருமணம் எனும் நிக்காஹ்’
அனைவருக்குள்ளும் புரிதல் அவசியம் என்னும்
கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள்
இடையே ஆகட்டும்,நண்பர்கள் இடையே ஆகட்டும் ,நம்முடன் பணிபுரியும் சகாக்கள்
இடையே ஆகட்டும் , நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும், எல்லோரிடமும்
நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த ‘புரிதல்’ அவசியம். ‘திருமணம் எனும்
நிக்காஹ்’ மதங்கள் இடையேகூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை
வலியுறுத்தும் படமாகும்.
திங்கள், 28 ஜூலை, 2014
ரமலான் வாழ்த்து
வெளியே கொணரும் ரமலான்;
மனதிற்குள் நிறைந்துள்ள தெய்வீகத்தை
முகத்தில் காண்பிக்கும் ரமலான்!
முப்பது நாள் நோன்புதனில் – ஏழையின்
பசியினை போதிக்கும் ரமலான்;
ஐந்து வேலை தொழுகையில் – மனித
ஆன்மாவினை சிறப்பிக்கும் ரமலான்!
இல்லாது உண்ணாததை விடுத்து – எல்லாம்
இருந்தும் உண்ணாமையில் ‘தீரம் தரும் ரமலான்;
நினைப்பதை நடத்தும் உறுதியை – மனதில் நிறைக்கும் திடத்தை
ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் ரமலான்!
சுத்தம் சுகாதாரம் ஒழுக்கம் காத்து – அதை
சுற்றத்திற்கும் ‘வாழ்ந்து கற்பிக்கும் ரமலான்;
உடலின் புத்துணர்ச்சியை ஒவ்வொரு நாளும் கூட்டி
மருத்துவகுண சிறப்பினையும் நோன்பினில் காண்பிக்கும் ரமலான்!
மறைபொருள் இறையென விடாது உயிர்பொருள் அவனென எண்ணியதில்
‘அல்லா’ எல்லாமுமாய் நின்று அருள்பாலிக்கும் ரமலான்;
ஏற்றத் தாழ்வினை கடந்து – இறையன்பில் கூடிநின்றோருக்கு மறையின் மகத்துவத்தை புரியவைத்திட்ட ரமலான்!
இல்லார் இல்லாததை மறந்துஇருப்போர் இயன்றதை வழங்கி உள்ளத்தில்; உலகின், வாழ்வின் சிறப்பென இந்நாளைகொண்டாடி மகிழும் ‘குதூகல ரமலான்;
கோடான கோடி பேரின் மகிழ்வில் பிறக்கும்
இறைதூதர் பணித்திட்ட ‘கண்ணியப் பெருநாள்; திருநாள்; ரமலான்!
ஞாயிறு, 27 ஜூலை, 2014
இருக்கு ஆனா இல்ல - சினிமா விமர்சனம்
எதையாவது
புதுசாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதான் ‘இருக்கு ஆனா
இல்ல’ படம். படத்தின் கதை வித்தியாசமானது என்பதில் சந்தேகமில்லை.
வழக்கமான
காதல் கதை தான். தன்னைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கும் ஒரு மனிதன்.
திடீரென அவன் வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்கையில் மாற்றங்கள்
நிகழ்கிறது. இதுதான் கதையின் போக்கு என்றாலும், அவன் வாழ்வில் வந்த அந்த
பெண் ஒரு பேய்!
இது
பயத்தை உண்டாக்கும் பேய் இல்லை, ரசிக்கிற வகையில் ஹீரோவோடு படம் முழுக்க
உலாவும் ஒரு அழகிய பேய். அந்த பேய் பெண்ணை ஒரு கட்டத்தில் ஹீரோ
காதலிக்கிறார் என்பது விளங்க முடியா கவிதை!
விரக்தியில்
சரக்கு அடித்து பைக்கில் வீடுக்கு போகும் ஹீரோ, வழியில் ஒரு விபத்தை
சந்திக்கிறார். அந்த விபத்தில் அவர் உயிர் தப்பினாலும், ஒரு பெண்
உயிரிழப்பதை பார்க்கிறார். வீட்டிற்கு வந்தால் அந்த பெண் வீட்டில் இருப்பது
தான் கதையின் முதல் ஆச்சரியம். பயத்தில் காய்ச்சல் வந்த ஹீரோ மருத்துவரை
அனுக, அது பேய் தான் என்பது கன்பார்ம் ஆகிறது.
தான்
யார் என்று தெரிந்துகொள்ள ஹீரோவையே சுற்றித் திரிகிறது அந்த பேய்.
ஹீரோவும் பல முயற்சிகள் செய்து அந்த பெண் பேயின் வீட்டைக்
கண்டுபிடிக்கிறார். இருந்தும் அந்த பேய் ஏதோ ஒரு தேவையோடு ஹீரோவை அனுக,
அந்த பேய் போலவே இருக்கும் அந்த பேயின் தங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றி
அவரைக் கரம் பிடிக்கிறார்.
நடுவே
பலமான சஸ்பென்ஸ் காட்சிகள் வந்து போகிறது. திரைக்கதையின் வேகத்தைக் கூட்டி
இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். தனியார் மருத்துவமனைகளின்
மோசடி மருத்துவர்களை ஒரு பிடி பிடித்திருப்பது பாராட்டுக்குறிய விஷயம்.
ஹீரோ
விவந்த் நடிப்பில் அசத்துகிறார். காடு மாதிரி முடியை வைத்திருந்தவர்,
திடீரென அதை ட்ரிம் பண்ணி ஸ்மார்ட்டாக வந்து அசத்துகிறார். ஹீரோயின் ஏடன்,
பேய் கதாபாத்திரத்திற்கு பொருந்துகிறார். படத்தில் நம்மை அதிக அளவில்
திருப்தியடைய வைப்பவர் ஹீரோவின் நண்பராக வரும் ஆதவன். இன்னும் பல
வாய்ப்புகள் அவருக்கு காத்திருப்பது உறுதி.
உண்மையைக்
கண்டறிய நோயாளியாக மருத்துவமனைக்குள் உளவு பார்க்க செல்லும் காட்சியில்
ஒய்.ஜி.மகேந்திரன் வயறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.
இது
கதையா கற்பனையா என்று குழம்பும் அளவிற்கு சரக்கு பார்டியில் கதை சொல்லும்
ஐடியாவுடன் படத்தை தொடங்கி, அதே காட்சியில் படத்தை முடித்திருக்கிறார்
இயக்குனர் கே.எம்.சரவணன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)